Home Tamil cinema news நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக குவிந்த ரசிகர்கள்-goat shooting spot

நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக குவிந்த ரசிகர்கள்-goat shooting spot

114
0

நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக பெருந்திரளாக திரண்ட விஜய் ரசிகர்கள்(goat shooting spot). நடிகர் விஜய் சமீபத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

அதன் பின் அவருக்கு ஆதரவாக பல முன்னணி நடிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் இது மட்டும் இல்லாது சிலர் அதனை விமர்சித்தும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் இவர் தற்போது ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அப்படி இருந்தும் தனது அரசியல் பிரவேசம் காரணமாக தான் முற்று முழுதாக சினிமாவில் இருந்து விலகி மக்கள் பணிக்காக முழுமூச்சாக அரசியல் பணிகளை ஈடுபடப் போகின்றேன் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தனது அறிக்கையில் மீதமுள்ள இரண்டு படங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அதனை நடித்து முடித்துவிட்டு முற்று முழுதாக அரசியலில் ஈடுபடப் போகின்றேன் என்றவுடன் ரசிகர்கள் தமது கருத்துக்களை சோசியல் மீடியாவில் ஆதரவாகவும் சில ரசிகர்கள் கவலையாகவும் share பண்ணியது அனைவரும் அறிந்த விடயமே.

இது இப்படி இருக்க கோட்(G.O.A.T) பட சூட்டிங் க்கு சென்ற விஜயை காண பெருந்திரளான ரசிகர்கள் குவிந்து இருக்கிறார்கள் அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. விஜய் தனது பாணியில் வாகனத்தின் மேலே ஏறி செல்பி எடுக்கும் புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here